காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது.