‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக்கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும் என்பதுதான்.