மிளகு அத்தியாயம் பத்தொன்பது

நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம்.

குருதி

வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள்.  ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.

வெறுமையில் பூக்கும் கலை

இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள்.