கூட்டுக்குள்ளிருக்கும் நிலை ஒரு வாரம் போல நீடிக்கும்- சில நேரம் மேலும் கூடுதலான அல்லது குறைவான நாட்கள் பிடிக்கும். ஏனென்று எங்களுக்குத் தெரியவில்லை. என்ன வெளியே வருகிறதோ, அது மனிதனில்லை. அந்த உருவுக்கு இன்னும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், உடல், மேலும் தலை இருந்தது. அந்த மங்கிய சிவப்புத் தோலில் எங்கும் தூரிகை முடி போலச் சிறு முண்டுகள் இருந்தன- மயிர் இல்லை, மிருக உரோமம் இல்லை, செதிள்களில்லை- அவற்றின் பயன் என்ன என்று தெரியவில்லை. தலைதான் அருவருப்பூட்டியது.