பாரவிப் பெண்கள் அவ்வப்போது மீள் உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி முடித்து மறுபடி பொம்மையாகிற, ’பகுதி உயிர்’களாகும். அவற்றோடு கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும் நினைவகத்தில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது அத்தகவலும் அழிக்கப்படும்.
Tag: குறுநாவல்
பனி இறுகிய காடு
வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.