புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்தது போல சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியிலும் ஒருவரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய நாடகங்கள், ஐரோப்பிய நாடகங்கள், நவீன இந்திய நாடகங்கள் என அத்தாள்களுக்குப் பெயர். இந்த த்தாள்களில் ஒன்றிரண்டைப் பாடம் சொல்வதற்காக அவரை அழைக்கலாம் என்று பேசினோம். தமிழ்நாட்டில் நடந்த பாதல் சர்க்கார் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் அவர். அந்த உத்வேகத்தில் அவர் எழுதிய முட்டை, அகல்யா என்ற இரண்டு நாடகப்பிரதிகளும் கவனிக்கத்தக்க நாடகங்கள் தான் என்று சொன்னேன்.
Tag: கி.ரா.
”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”
நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான்
நீள்ஆயுள் நிறைசெல்வம்
ஐம்பது வயதிற்கு மேலான வாழ்க்கை நெருக்கடிகள், நோய் போன்றவை மற்றவர்களை இறுக்கிச் சுற்றுவதால் ஓரிரு ஆண்டுகளாக வீட்டில் ஓர் அமானுஷ்யம்போலச் சோர்வு கவிழ்ந்திருக்கிறது. அப்பாயியும், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையும் அந்த படலத்தைக் கிழித்து ஔி பரப்புகிறார்கள்.