இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது.
Tag: கிஷ் ஜென்
நாடு கடத்தப்பட்ட லூலூ
அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.