மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி, உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.