மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

மித்ரோ மர்ஜானி – 8

This entry is part 8 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும்  மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால்,  இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.

மித்ரோ மர்ஜானி – 7

This entry is part 7 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!

மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5

This entry is part 5 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.

மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3

This entry is part 3 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2

This entry is part 2 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்து கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, கொழுந்தனாரை சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, ” கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”

மித்ரோ மர்ஜானி – 1

This entry is part 1 of 9 in the series மித்ரோ மர்ஜானி

எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி  ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.

ஏ பெண்ணே 10

This entry is part 10 of 10 in the series ஏ பெண்ணே

அம்மா வாய் திறக்காமல் மௌனமாக படுத்திருக்கிறார். பேச்சின்மை அம்மாவின் மீது கவிழ்ந்திருக்கிறது. கையில் அணிந்திருந்த  வளையல்களை கழற்றி தலையணை அடியில் வைத்து விடுகிறார். போர்த்தியிருந்த போர்வையை பந்தாக சுழற்றி தரையில் வீசி எறிகிறார். தலைக்கு கீழ் இருந்த தலையணையை எடுத்து ஒரு மூலையில் வைத்து விடுகிறார். குஷனை அறையின் வாயிலருகே தூக்கி எறிகிறார். கீழே விரிக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்பை இழுக்க முயற்சித்து,  தலையை இடமும் வலமும் சுழற்றுகிறார்.

ஏ பெண்ணே 9

This entry is part 9 of 10 in the series ஏ பெண்ணே

போதும். என்னை ரொம்பவும் புகழ்ந்து ஆகாசத்தில் ஏற்றி விடாதே பெண்ணே! நான் நிச்சயம் உங்களுக்கெல்லாம் அம்மா தான்,  அதே சமயம் நான் உங்களிடமிருந்து வேறுபட்டவளும் கூட. நான் நானாக இருக்கிறேன். நான் நீயல்ல,  நீயும் நானல்ல.அம்மா, தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்!

ஏ பெண்ணே – 8

This entry is part 8 of 10 in the series ஏ பெண்ணே

மகள்,  தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த போதிலும்,  அம்மாவின் நெற்றியில் மென்மையாக முத்தமிடுகிறாள். எவ்வளவோ வருடங்களாக இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்,  சமீப காலமாகத்தான்,  இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததற்கு,  ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. இவ்வளவு பெரிய உலகத்தையேனும் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் குடும்பக் கவலைகளிலும் பொறுப்புகளிலும் உழன்றே,  வாழ்க்கை முடிந்து விட்டது.

ஏ பெண்ணே – 7

This entry is part 7 of 10 in the series ஏ பெண்ணே

எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு அழுத்தமான கோடு கிழிக்கப்பட்டிருந்தது. கடைசி நாட்களில்,  உன் தாத்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது, நானும் என் சகோதரிகளும், மாறி மாறிச் சென்று, அவரோடு தங்கி யிருந்தோம். ஆனால் அவர் எப்போதும் குரல் கொடுத்து அழைத்ததென்னவோ தன் மகனைத் தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகன் மீது மட்டும் ஏன் இத்தனை கண்மூடித்தனமான  பாசம்!

ஏ பெண்ணே – 6

This entry is part 6 of 10 in the series ஏ பெண்ணே

நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால்,  எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால்,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.

ஏ பெண்ணே – 5

This entry is part 5 of 10 in the series ஏ பெண்ணே

உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம்,  அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட,  ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.

ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 10 in the series ஏ பெண்ணே

என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்

ஏ பெண்ணே – அத்தியாயம் 3

This entry is part 3 of 10 in the series ஏ பெண்ணே

நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.

ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 10 in the series ஏ பெண்ணே

உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.