வழக்கம் போல பழைய பாடல் தேடலில் மாட்டியது இந்தப் பாடல். படம்: நான் பெற்ற செல்வம் (1956) இசை: ஜி.ராமநாதன். குரலாலேயே விரட்டி விளையாடும் டி.எம்.எஸ், ஜிக்கி. நடுத்தர குடும்பத்தை கண்முன்னே காட்டும் சிவாஜி, ஜி.வரலக்ஷ்மி. தொப்பையில்லாத, தன் ஒவ்வொரு அசைவிலும் ‘நடிகர் திலகம்’ என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயங்கள் இல்லாத சிவாஜி. இந்தப்பாடலில் இவரின் உடல்மொழிகள் கூட ஆரம்ப காலக் கமல் படங்களில் நாம் கண்டவையே. எழுபதுகளின் இறுதியில் இலங்கை வானொலியில் ஜிக்கி, ஏ எம் ராஜா பாடல்கள் தவிர நேரமிருந்தால் மற்ற பாடல்களும் போடுவார்கள் என்றிருந்த காலத்தில் ஏதோ ஒரு ஓய்ந்த மதிய வேளையில் கேட்ட பாடல். காலத்தை வென்ற இசை மனதை நிறைக்கிறது.
Tag: கிருஷ்ணன் சங்கரன்
கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்
ஆற்றுக்குச் செல்லும் பாதை நெடுக இருபுறமும் தென்னை மரங்கள், வாழை, கரும்பு. அதிஷ்டானத்தைக் கடந்துதான் சென்றோம். மயிலின் அகவல் திரும்பியபக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரே இரண்டு மணல் லாரிகள் கடந்து போயின. எச்சரிக்கைப் பலகை இங்கு ஆற்றில் ஆழம் அதிகம், சுழல் உள்ள பகுதி, பலபேர் பலியான இடம் என்று பயமுறுத்தியது. ஆறு எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாணல் மண்டிக்கொண்டு வருகிறது. ஒரு சின்ன மணல் பள்ளம். ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்திருக்க வேண்டும். ஏறினால் மணல் மேடு. ஒரு காலத்தில் பள்ளமாகும். அங்கு ஒரு குடும்பம் திதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாணல் குச்சங்கள். மணல்மேடு மறுபடியும், மேடுதோறும் திதி முடித்துச் செல்லும் மனிதக்கூட்டம் விட்டுச் செல்லும் கழிவுகள், வாழைப்பழம், இலை, காய்ந்த பூ இத்யாதி… பக்கத்தில் சின்ன நீர்த்திட்டு.ஆங்காங்கே வெள்ளித் தகடுகளாக சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது காவிரி.
கதை சமைக்கும் விதிகள்
நண்பனின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக ஊட்டி வந்திருந்தான் பெத்து. நண்பன் அந்த வட்டார அரசு போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரி. இவனோடு ஒரு காலத்தில் வங்கியில் வேலை செய்திருந்தான். பல வருடங்களாக வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளனாகியிருந்தான். ஆளுங்கட்சி உறுப்பினன். இந்த விழாவையே அந்தக் கட்சியின் இலக்கிய அணிதான் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதை இவர்கள் இருவருக்கும் தெரிந்த, ஒன்றாக வேலை செய்த பெண்ணைப் பற்றியது. அவளைப்பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்த ஒரு விஷயத்தை வைத்து ஒரு கதை எழுதியிருந்தான் நண்பன். ஏன் எழுதினான் என்று கேட்டதற்குத்தான் இந்த ரகளை. மனைவியின் ஊரான அம்பிளிக்கையில் குடும்பத்தை வைத்திருந்தான்.
கல்கோனாக்கள் கரைவதில்லை
‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் “கல்கோனாக்கள் கரைவதில்லை”
பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?
மன்னர்கள் இரண்டுவகையிலாக நினைவு கூறப்படுகிறார்கள். முதலாவதாக, பல இராச்சியங்களை வென்று பெரும் நிலப்பரப்பை தன் குடைக்கீழ் கொண்டு, பன்னெடுங்காலம் ஆண்டவர்கள். இரண்டாவதாக, குறைந்த காலமே, குறுகிய நிலப்பரப்பையே ஆண்டாலும் கல்வியிலும், அருங்கலைகளிலும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றவர்கள். கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசன், முதலாம் “பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?”
நானன்றி யார் வருவார்….
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி சபரீஸ் ஹோட்டலில் ‘ஆர்டர்’ செய்து விட்டுக் காத்திருந்தபொழுது, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை…..’ என்று மனதுக்குள் காலையிலிருந்து பாடிக்கொண்டிருந்த வாணி ஜெயராம் திடீரென்று ஆம்பிளைக் குரலில் வெளிப்பட்டுவிட, எதிரே பிரும்மாண்டமான சோலாப்பூரிக்குப் பின்னிருந்து தலையைத் தூக்கி ‘தர்பாரி கானடா?’ என்றவரின் முகம் இன்னும் “நானன்றி யார் வருவார்….”
லா.ச.ரா. நூலகம்
எதிரே இரண்டு சதுர ‘பக்கெட்டுகள்’ நிறைய புத்தகங்களைக் காண்பித்து ‘இதெல்லாம் ‘ரிட்டன்’ வந்தது. எல்லாம் முக்கால்வாசி லேடி ரைட்டர்ஸ்தான். இவங்களுக்கு இருக்குற ‘ரீச்’ நீங்க நெனைச்சுக்கூட பாக்க முடியாது. ஜென்ஸ்ல சுஜாதா, பாலகுமாரன் இந்த ரெண்டு பேர்தான் இவங்க அளவு ‘கிரேஸ்’ உள்ளவங்க. இந்த புக்க எடுங்க, பின்னால பாருங்க எத்தனை ‘சீல்’ இருக்குன்னு, ஐம்பதுக்கு மேலயே இருக்கும். அத்தனைபேர் படிச்சிருக்காங்கன்னு இல்ல, அத்தனை முறை புத்தகம் வெளில போயிருக்கு.
பாரதியின் கடைய வாழ்வு
பாரதி சாதிப்பிரிவினையை எதிர்த்து கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன் ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். …ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்த அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர்.
கடவு
ஓட்டுநர்களில் மூன்று வகைமையினர் உண்டு. பகலெல்லாம் ஓட்டுபவர்கள். இவர்களுக்கு பணமும் வேண்டும். இரவுத் தூக்கமும் வேண்டும். இரண்டாவது வகையினர் இரவில் மட்டும் ஓட்டுபவர்கள். ஆனால் சரியாகச் சொன்னால் இவர்கள் முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் முன் மதியம் வரை ஓட்டுவார்கள். சரியாக தூங்குவதற்காக ஆறு மணிநேரம் மட்டுமே வீட்டிலிருப்பார்கள். மூன்றாவது வகையினர் வண்டியை விட்டு சாப்பிடுவதற்காகவும் இயற்கை உபாதைகளுக்காகவும் மட்டும் இறங்குபவர்கள்.
உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்
மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத்திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள்.
அழியாத கோலங்கள்
ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்ளிருந்த தவளை – சயின்ஸ் சார் ஜீரண உறுப்பு விளக்கத்திற்காக அறுத்துக் காண்பிக்க பிடித்து வரச் சொல்லி இவன் பிடித்துவந்ததுதான்.இன்னைக்கு சயின்ஸ் சார் லீவு – செல்லப்பாண்டியையும் கணக்கு சாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். இல்லையேல் டி .சி கொடுக்கப்படும். ஆனால் ஸ்கூலுக்கே டி சி கொடுத்துவிட்டான் செல்லப்பாண்டி.
தத்வமஸி: புத்தக அறிமுகம்
நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால் வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.
லூர்து நாயனார்
பழைய கதைகளைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கதைகளைப் படிக்க சில “வெப் சைட்”களை அறிமுகம் செய்துவைத்தேன். வாட்ஸ் அப்பில் சில சந்தேகங்களைக் கேட்டார். சொல்லிக்கொடுத்தேன். ‘வீபூதிப் பிள்ளையாருக்கு எதித்தாப்பல இங்க ஒரு கிளிக்கூண்டு இருந்ததே, எடுத்துட்டாங்களா?’ என்றேன். ‘அடேயப்பா, அதாச்சு கொள்ள வருஷம். அம்மன் கைல நின்னாலும் நின்னுச்சு, ஒரு பத்து பதினஞ்சு கிளியைப் பிடிச்சு கூண்டுல போட்டுட்டாய்ங்க, நல்ல வேளையா புது ‘தக்கார்’ எல்லாத்தையும் வெளில விட்டுட்டாரு. . . ‘ என்றார் படியேறிக்கொண்டே. “சார், நீங்க மதுரைல கிளி பாத்துருக்கீங்களா, நான் ஒண்ணே ஒண்ணு கூட பாத்ததில்லை. நான் படிச்சதெல்லாம் பக்கத்தில கிராமங்களிலேதான். அங்க கூட” என்றேன்.