பாஸ்கரனுக்கு கிரிக்கெட் பாட் இருந்தாலும் அவனுக்கு ‘பௌலிங்’ போடப் பிடித்திருந்தது. அது கோமதிக்கு மகிழ்ச்சி யளித்தது. தடதடவென்று ஓடி வந்து வேகமாய்க் கையைச் சுழற்றினால் பந்து புயலைப்போல வந்தது. விளையாட சிரமமாய்த்தான் இருந்தது.எப்படி அவனுக்கு இத்தனை வேகமாய்ப் பந்தை எறிய முடிகிறது என்று கோமதிக்கு ஆச்சர்யம். இமைக்கும் நேரத்தில் பந்து அவனைக் கடந்து சென்றது. அதிலும் ஒன்றிரண்டு பந்துகளை கோமதி தொட்டுவிட்டாலே பந்து கதறிக்கொண்டு வாத மரத்தைத் தாண்டிப் பாய்ந்தது. ஃபோர்.
Tag: கிரிக்கெட்
சிவன் ஆடிய களம்
எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை
நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)
அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த புன்னகை அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே புன்னகைக்க மட்டுமே செய்தார். பின் வென்றார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?
50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”
வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்
நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன்.