ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி முடுகி தேடுகையில் திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.
Tag: கிராமம்
அந்த இவள்
சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும். அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். சாப்பாடும் வைக்கும் போது அவள் காட்டும் நேர்த்தியும், பதறியபடி இவனின் ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது.
விடியல்
தெக்குப்பண்ணையின் வயலில் அறுவடைக்கு பின்னாக எஞ்சும் வைக்கோலை தனது மாடுகளுக்காக கேட்பதற்கு வந்த பெரியசாமி, “வைக்கல் எப்போ கெடைக்கும்?” என்றார். தெக்குப்பண்ணை “இப்போதான் பயறு மூடையல்லாம் லோடு போயிருக்கு, ஆள் ஒன்னும் கிடைக்கல, எடுத்துக் கட்ட இன்னும் ரெண்டு நாள் ஆகும் பெரியசாமி, ஆள் இருந்தா நீயே பாத்து “விடியல்”