ரமாவின் மீது நண்பனின் தங்கை என்பது தவிர பெரிய பற்றெதுவும் சங்கருக்கு இல்லை. திரைப்படங்கள் பல உறவுகளை சிக்கலாக்கி விடுகின்றன. பாதிப்படங்கள் நண்பனின் தங்கையை காதலியாகவும் மீதப் படங்கள் தங்கையாகவும் இரு எல்லைகளாக வகுத்துவிடுகின்றன. இது, இரண்டுமில்லாது இருப்பவர்களை பெரும் சங்கடத்தில் தள்ளுகின்றது. சங்கர் கிருஷ்ணனைக் காணச் செல்லும்போது எப்போதாவது எதிர் கொள்வதையன்றி அவளுடன் எந்த தனிப்பட்ட உரையாடலும் நடந்ததில்லை. நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பே சங்கருக்கு பெரும் துயரை உண்டாக்கியது.
Tag: கா.சிவா
இருமை
சிங்கப்பூரிலிருந்து வந்த அவன் கொண்டு வந்த இரு பெட்டிகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம். அது இரண்டாயிரமாவது ஆண்டு. வாடகை வண்டிகளெல்லாம் இப்போதளவிற்கு இல்லை. நான் வில்லிவாக்கத்திலிருந்து டி.வி.எஸ் எக்செல் வண்டியில் சென்று நுங்கம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு இரண்டு ரிடர்ன் சீட்டு வாங்கிக் கொண்டு திரிசூலம் சென்றிருந்தேன்.
கவிதைகள் – கா. சிவா
பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…
பருவத் தொடக்கம்
வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
கவிதைகள்
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.