பருவநிலை மாற்றத்துக்கு இந்தியா அளிக்கக்கூடிய விலை

இந்த ஆய்வு குறித்த விவாத பகுதியில் (‘Discussion’) கட்டுரையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் சிக்கலானவை- ஒவ்வொரு தேசமும் தன் கார்பன் உமிழ்வுகளின் மீது தன் கார்பன் சமூகவிலையைச் சுமத்தினால் (கார்பன் வரி என்று சொல்லலாம்), பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனால் பயனில்லை.)