அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது.
Tag: கல்வி போதனை முறைகள்
நானென்பதும் நீயென்பதும் அதுவென்பதும்
வளர வளர குழந்தைகள் தன்னியல்பில் கற்றுக்கொள்வதை இந்தக்குழந்தைகளுக்கு படிப்படியாக கற்பிக்க வேண்டியதை இந்தநூல் சொல்கிறது.முதலில் குழந்தையை மனதால் பின்தொடர்ந்து புரிந்து கொள்வதன் அவசியத்தையும்,அவர்களை மனதாற ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் சொல்கிறார்.இவை இரண்டும் சரியாக நடந்துவிட்டால் அடிப்படையான சிக்கல் முடிவிற்கு வந்துவிடும்.