பிரபஞ்சம் – பாகம் 2

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஐந்து வகையான அடிப்படை அணுத்துகள்களால் மட்டுமே ஆனது என்றால் நம்பமுடிகிறதா? நம் அறிவியல் இதைத்தான் முன்வைக்கிறது. எப்படி, ‘X’ மற்றும் ‘Y” என்ற இரண்டே இரண்டு குரோமோசோம்கள் இந்த மொத்த மனித சமூகத்துக்கும் பொதுவானதோ, அதே மாதிரிதான் ஐந்தே ஐந்து அடிப்படை அணுத்துகள்கள் இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவை.

பிரபஞ்சம்

சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம் வெறும் 8.3 ஒளி நிமிடங்கள் என்றால் , நம் விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரக் கிட்டத்தட்ட 270 நூற்றாண்டுகள் ஆகும். நாம் இப்பொழுது அந்த ஒளியைக் கண்டுகொண்டிருந்தால் அது ஏறத்தாழ 27,000 ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய ஒளியாகும்.