அந்த இவள்

சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும்.  அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். சாப்பாடும்  வைக்கும் போது அவள் காட்டும்  நேர்த்தியும், பதறியபடி இவனின்  ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது.

சடைப்பூ

கூடப்படிக்கிற பிள்ளைகள், ஆயா னு எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.குண்டுமல்லியும் கனகாம்பரமும் வரிவரியாய்க் கண்ணை மலர்த்திச் சிரிப்பது போலிருந்தன.நடுவில ஒரு பட்டு ரோஸ் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ல.கையில் வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதற்கே நாள் போதாது போல.

கல்நின்று முன்நின்றவர்

உணர்வு தன் சிறகுகளை ஒன்றிணைத்து உறங்கும் பட்டாம்பூச்சியென உரைந்து சிறகடிப்புகளில் தன்னை மீட்டு மீண்டும் அடங்கியது. மனம், எதிலோ முட்டிக்கொண்ட விசையுடன் அதை ஊதி நகர்த்திற்று. கணந்தோறும் உணர்வின் சிறகடிப்பு. உணர்வு, எழுந்து பறந்து அதன் வண்ணங்களை உதிர்த்து வெற்றுச் சிறகுகளுடன் வேறொரு புல்லில் அமர்ந்த கணமே உதிர்ந்த வண்ணங்களை மனம் ஊதி உணர்விடம் மீண்டும் சேர்த்தது. அது ஒரு முடிவிலி. சலிப்பின்றி ஆடப்படும் ஆட்டம். அதன் கோடிக்கணக்கான கண்ணிகளின் இடுக்குகளில் சிலவற்றிலே விரல் அகஸ்மாத்தாக சிக்கிக்கொள்கிறது.

இயற்கைப் பரிமாற்றம்

அவளுடைய பிரத்தியேகமான படுக்கையறை கதவுக் குமிழில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், அவள் அன்றைய காலை வேட்டையில் கண்டெடுத்த பொருட்களை வைத்தாள். தோள் பையில் அவளது மகன் நீல் கண்டெடுத்த பொருட்களின் கணிசமான ஒரு பகுதியும் இருந்தன. மற்றவை அவளுடைய பெட்டிகளில் இருந்தன. அவளும் மிஷலும் பிரிவதற்கு முன்பு, அந்தப் பை அவர்களுடைய படுக்கை அறையின் கதவுக்குமிழில் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் கனத்தில், ஒருநாள், கதவுக்குமிழ் உடைந்து கையோடு வந்துவிடப் போகிறது என்று மிஷல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பான. ஆனால் அப்பையை அங்கிருந்து அகற்றும்படி அவளிடம் ஒருபோதும் சொன்னதில்லை.

கொழும்பு டீ

மலர் இப்படித்தான், எந்த நேரம் என்று இல்லாமல் அலைபேசியில் அழைப்பது, இன்னும் சற்று நேரத்தில் திருப்ப அழைக்காவிட்டால் அவ்ளோ பிஸி ஆவா இருக்க என்று வீட்டுக்கே கிளம்பி வந்து கோவித்துக்கொள்வது, அவனது அணைத்து அலுப்புகளையும் என் காதுகளுக்கு மடை மாற்றி விடுவது, நான் கோவப்பட்டால் ” நீ தான் என் பஞ்சிங் பேக்” என்று என் மூக்கை செல்லமாக திருகுவது என்று என்னால் வெறுக்க முடியாத ஓரு சித்திரம்.

பயம் தொலைத்த பயணம்

இல்லை, இங்கை கனடாவிலிருந்த மாமாதான் எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினவர். எங்கடை கலியாணம் இந்தியாவிலைதான் நடந்தது. மூண்டு கிழமை லீவிலை வந்து இவர் என்னோடை இந்தியாவிலை நிண்டவர். அதுக்குள்ளை எனக்கு பிள்ளையும் தங்கியிட்டுது. பிறகு பிள்ளைக்கு ஒண்டரை வயசானப் பிறகுதான் நான் இங்கை வந்தனான். வந்தகையோடை அடுத்த பிள்ளையும் தரிச்சிட்டுது. இப்ப திரும்பவும் நான் கர்ப்பமாயிருக்கிறன்”

“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி

This entry is part 20 of 48 in the series நூறு நூல்கள்

“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.

சரியான வெகுமதி

ஆனால், கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்கள் உள்ள ஒரு பணியாளருக்கு லக்ஸ் அதிகம் ஊதியம் தர வேண்டும். என் போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் அற்ற ஒருவருக்கு அடிப்படை ஊதியம் தந்தால் போதும். அங்கே தான் அவருக்கான லாபம் இருக்கிறது. இது செவ்வாயில் அமையப்பெற்ற அரசாங்கத்தை அவர் ஏமாற்றும் விதம்.

வீடு

கலர் டிவியே பார்த்திராத எனது தாத்தா ஐ ஃபோனில் PUBG ஆடிக்கொண்டிருப்பார். அவரை பார்த்தே இராத என் குழந்தைகள் அவரோடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருப்பர். இக்கால அண்டை வீட்டு பென் எங்கள் புழக்கடை வாவியில் தண்ணி இறைத்துக்கொண்டிருப்பார். இது போல.

அனாயாசம்

அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.

சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்

ஏனோ தெரியவில்லை,  தாஜ்மஹால் அவனுக்கு என்றுமே அழகாகத் தோன்றியதில்லை. வெயிலில்,  அதன் வெண்பளிங்கு கற்களின் கண்களைக் கூசவைக்கும்  பிரகாசத்தில்,  அவன் எப்போதும் அதற்கு முதுகை காட்டியவாறுதான் அமர்வது வழக்கம். மீராவையும் தானே அந்த பிரகாசம் கண்களைக் கூச வைக்கக்கூடும்? ஒருவேளை அவளுக்கு தாஜ்மஹால் அழகாக இருப்பதாகவே தோன்றியிருக்கும்

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”

தையல்

“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.

ஜெயந்தி டீச்சர்

டீச்சராக மாறிய ஜெயந்தி மாரியிடம் நிறைய பேசினாள். பேச்சு வளர்ந்து அந்த’ நாட்கள் பற்றிப் போனது. வீட்டுப்பாடம் எழுதும்போது டீச்சர் ரோல் ஒரே முறை மாரிக்கு போனது. மாரி தன் மாதாந்திரப் பிரச்சனைகளைப் பேசினாள். கிளாசிலிருந்து பேக் எடுத்துக் கொண்டு நாப்கீன் வாங்க போகும் போது மாரியின் டீச்சர் ரோல் தொடர்ந்தது. நைன்த், டென்த் அக்காக்கள் வழி அறிந்தவைகளைப் பகிர்ந்து கொண்டாள். மாரி வழியாக பொம்பளப் பிள்ளைகள் படும் கஷ்டங்களை நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது; திகைப்பாகவும், பயமாகவும் இருந்தது.

அனாதை

”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.

கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”