Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.