நவீனப் போர்விமானங்கள்

பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு அரிசோனன் குறிப்பு:  விமானங்களின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி எழுதாமல் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே. பொதுவாக விமானங்கள் என்று எழுதினால் ரைட் சகோதரர்களிடமிருந்து தொடங்கி இன்றுவரை உள்ள பயணி “போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1”

வாயுக்கூண்டும் ஊதுபைகளும்

சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங், “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது.  “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை;  அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றி…

இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்

இந்தியா ஆங்கிலேயர் வரவுக்கு முன்னர் 56 பகுதிகளாகப் பிரிந்து அரசர்களால் ஆட்சிசெய்யப் பட்டுவந்தாலும், உணர்வால் ஒன்றியிருந்தது – இருக்கிறது. வீட்டிலோ, கோவிலிலோ எந்தவொரு நற்செயலையும் தொடங்கும் முன்னர் இந்தியா முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழியில் (சங்கல்பம்), “ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே..” என நாவலந்தீவான (மூன்று திசைகளில் கடலாலும், வடக்கில் இமயமலையாலும் தீவாகத் தனிப்படுத்தப்பட்ட) இந்தியாவின் 56 பகுதிகளையும் ஒரு குடைக்கீழ் கொணர்ந்து ஆட்சிசெய்த பரத மன்னனின் பெயரைச் சொல்லிப் பாரத நாடும், பரதக் (துணைக்) கண்டம் என்னும் இந்தியாவின் மக்களாகிய நாங்கள் செய்யப்போவது இச்செயல் என்று குறிப்பிடுகிறோம்.

சீனா… ஓ… சீனா!

இப்பொழுது சீனா என்றால் அண்டை நாட்டிலுள்ள இந்தியருக்கு நினைவுக்கு வருவது 1962 இந்திய-சீன எல்லைப் போரும், இடைவிடாது தரப்படும் பிரச்சினைகளும், தலைவலியும், தடுக்கவே இயலாத பிரம்மபுத்திராவையே தடுத்து நிறுத்தித் , தன்பக்கம் ஈர்க்கும் திட்டம்தீட்டிச் செயல்படுத்தும் வேகமும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை எதிராகத் தூண்டிவிட்டு மறைமுகமாகச் செயல்படும் குள்ளநரித்தனமும்தான்.

எங்கே போகிறேன்?

சுவாமிகள் எப்போது சித்தியடையப் போகிறார்? ஒரு மாசமாக அப்படியே கண்ணைமூடி அமர்ந்திருக்கிறாரே! உடலில் ஒரு அசைவும் இல்லையே! மூச்சு போய்வருவதாகவும் தெரியவில்லை. எல்லாம் அடங்கிவிட்டாற்போல இருக்கிறதே! ஜீவசமாதிதான் செய்யப்போகிறார்களா?’அவர் உடம்பில் பிராணன் இருக்கா இல்லையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவரை நாம தொட்டுப்பார்க்கவா முடியும்?” இது இன்னொருவரின் கேள்வி?