வேலியில் ஓடியிருந்த பிரண்டைக் கொடியில் குழந்தையின் மெலிந்த விரல்களைப்போல இளம்பச்சையில் பிரண்டைக்காய்கள். நுனியில் சுருள் வளைவுகளாய் கொடி நீண்டிருந்தது. அம்மா கொடி நுனிக்காய்களை மட்டும் கிள்ளி எடுப்பாள். நடுக்காய்கள் முத்தலாயிருக்கும் என்பாள். இளங்காய்களைப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி மிளகாய், உளுத்தம் பருப்பு வறுத்து, உப்பு, புளி வைத்து துவையலரைப்பாள். சூடான “மணப்பு”