நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு சுவாரசியமான மனிதர். செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து இலவச மின்சாரம் வழங்குவது மாதிரியான அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால் இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்!
Tag: எண்ணெய்
எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்
பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.
எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி
மூன்று வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு கான்பரன்ஸ்சுக்கு ஒரு விரிவுரை வழங்கப்போயிருந்தேன். பிணையத்தின் போக்குவரத்தில் அதிவேகமாக பயணம் செய்யும் விதம்விதமான குட்டி டிஜிட்டல் பொட்டலங்களை அடையாளம் கண்டுபிடித்து மேலாண்மை செய்வதை பற்றிய என் பேச்சைக்கேட்க கூட்டம் ஒன்றும் அலை மோதவில்லை. ஆனால் அதே மாநாட்டில் இன்னொரு உரை வழங்கிய ஈலோன் மஸ்க்குக்கு (Elon Musk) என்னையும் சேர்த்து நிறைய கூட்டம். டெஸ்லா மோட்டார்ஸ் என்ற முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அதிகாரியான அவர் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மின்சாரக்கார்கள் எப்படி உலகையே எதிர்காலத்தில் மாற்றப்போகின்றன என்பதுதான் அவரது உரையின் சாராம்சம் என்றாலும்…