ஒரு அதிபுத்திசாலி செயற்கை நுண்ணறிவு உருப்பெற்று வந்தால்- அது நடக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை- அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது.