மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.