மீண்டும் சீனா

என் மனம் முழுவதுமாக உடைந்து விட்டிருந்தது. பெண்ணின் பல பரிமாணங்களை நான் கண்டிருக்கிறேன். அவளுக்கு தன் வீடு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகத் தெரிகிறது. எந்த விலை கொடுத்தேனும், பெண், எப்போதும் தன் வீட்டை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கிறாள். வீட்டைச் சிதற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள படுகிற பாட்டில், அவள் எத்தனை எத்தனை முறை உடைந்து போகிறாள்! வெட்கமோ, மானமோ, குற்ற உணர்வோ,எதுவுமே அவளது இம்முயற்சியின் ஊடே, நுழைய முடிவதில்லை! அவளது தேவை ஒரு வீடு: தலையை மறைத்துக் கொள்ள ஒரு கூரை!