” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.
Tag: இலட்சுமிநாராயணன்
விடியல்
தெக்குப்பண்ணையின் வயலில் அறுவடைக்கு பின்னாக எஞ்சும் வைக்கோலை தனது மாடுகளுக்காக கேட்பதற்கு வந்த பெரியசாமி, “வைக்கல் எப்போ கெடைக்கும்?” என்றார். தெக்குப்பண்ணை “இப்போதான் பயறு மூடையல்லாம் லோடு போயிருக்கு, ஆள் ஒன்னும் கிடைக்கல, எடுத்துக் கட்ட இன்னும் ரெண்டு நாள் ஆகும் பெரியசாமி, ஆள் இருந்தா நீயே பாத்து “விடியல்”