அவர் மனதிலும் துருவன் மகன் ஞானவானாக, சத்திய வடிவாக, ஜாதிகளைப் பாராதவனாக, அறிவோடு எதையும் ஆராய்பவனாகத் தானிருக்கிறான். வணிகர் விரிக்கும் வஞ்சகச் செல்வ வலையில் அவர் தலைமை புரோகிதரைப் போல மயங்கவில்லை. வறட்சியால் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் தன் கூட்டத்தினரை தடுத்து நிறுத்த அவர் ரத்னாகர ஏரியைத் தோண்டச் செய்கிறார். அவர்கள் நிராசையுற்று அந்தப் பணியை நிறுத்த நினைக்கையில் தங்கக் கலசம் ஏரியின் அடியில் இருப்பதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். ஊரெங்கும் நதிகள் இளைத்து ஏரிகள் வற்றிவிட இவர்கள் குடியிருப்பின் ஏரியில் நீர் வருகிறது;
Tag: இலக்கிய விமர்சனம்
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.
தீதின் உணவுச் சங்கிலி: ஒடிய மொழிப் புத்தக அறிமுகம்
நாவலின் ஆழம் அதன் கூறுமொழியால் வருவது. கதைசொல்லி எல்லாம் தெரிந்தவர். நடப்பது அத்தனையையும் ஒவ்வொரு காட்சியாக தன் கருத்துக்களோடு விவரிக்கிறார். ஆனால் என்ன நடக்கிறதோ, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பட்டுக்கொள்ளாமல் கதை சொல்கிறார். இது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பது ஒன்று என்றால், இந்த நடுநிலைமை நம்மை உறுத்தவும் செய்கிறது. கதைசொல்லியின் நகைமுரண் பார்வையும் கச்சிதமான நகைச்சுவை கூடிய அவரது கருத்துக்களும் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அபத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.