மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு

அர்ஜுனனான அவர் சந்தேகத்தைத் தீர்த்த கிருஷ்ணன். அதெப்படி கஸ்டமர் கேட்ட அரை மணி நேரத்திலே பாயசம் வந்துடறது என்று கேட்டால், மனைக்கு வரச்சொல்லி அங்கே வரிசையாக வைத்திருந்த நாலு ரெப்ரிஜிரேட்டரில்  பால்  பொடியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் பொடித்து வைத்த ஏலமும், வேகவைத்த முந்திரியும், ஊற வைத்த குங்குமப்பூவும், பிசினாக வைத்த பச்சைக் கற்பூரமும், வேகவைத்த பாலடையும், பல நிலையில் பாகு வைத்த வெல்லமும், சீனியும் பசும்பாலும், எருமைப் பாலும்,  விதவிதமாக பால்பாயசத்தின் முன்வடிவங்கள் என்று அறிமுகப்படுத்தினார். 

மிளகு – அத்தியாயம் இருபது

பிராணிகளின் வகுப்பு என்ற எகானமி கிளாஸ் தான் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இலவசமாக வந்தால் எக்சிக்யூட்டிவ் கிளாஸ் அதே செலவுக்கு கிடைத்தால் சர்க்காருக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. இப்போதோ சங்கரன் கேட்காமலேயே மேலேற்றப் பட்டிருக்கிறார்.அவர் உயிர் இருந்தாலும் போனாலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. முன்னாள் அரசுத்துறை காரியதரிசி, மற்றும் அரசு ஆலோசகர். இது போதாது அதிகபட்ச பாதுகாப்பு தர.

மிளகு அத்தியாயம் பதினான்கு

“எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.

மிளகு – அத்தியாயம் பதினொன்று

பிரப்பங்குடை மேல் இருந்து தண்ணீர் வடிந்தபடி இருக்க, கிருஷ்ணப்பா கீழிலிருந்து கையில் செப்புக் கிண்டியோடு வெளியே வந்து கையளவு நீரை குடைமேல் விசிறி அடிக்க, சுகமான வாசனை குளிர்ச்சி பகர்த்தி வந்து நின்றது.
”ஓ கிருஷ்ணப்பா அதென்ன அபின் கலந்த தண்ணீரா? முட்டை விற்க அபின் எதற்கு?”
பெத்ரோ கேட்க, இல்லை பிரபோ என்று அவசரமாக மறுத்தான் கிருஷ்ணப்பா.
”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”.

மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்

கமோடிட்டீஸ், ஃப்யூச்சர்ஸ், ஃபார்வேர்ட்ஸ், ஆப்ஷன்ஸ் அண்ட் ஸ்வாப்ஸ் (COMMODITY FUTURES, FORWARDS, OPTIONS & SWAPS) வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் ’ஊக கச்சவடம்’ (ஊக வர்த்தகம்) மருது செய்வது.

மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்

நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு.  சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, “மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்”

மிளகு – அத்தியாயம் 6

ஒரே வயசு, ஒரே மாதிரி பின்னணி. ஒரே மதம், சமணம். பக்கத்து பக்கத்து சிறு நிலப் பரப்புகளை ஆட்சி செய்யும் உரிமை. நல்ல பெயர். இரண்டு பேருக்குமே இதெல்லாம் வாய்ந்திருக்கிறது.
சென்னபைரதேவி மிளகு ராணி. அப்பக்காவுக்கு அபய ராணி என்று பெயர். அ-பய-ராணி பயமென்பதையே அறியாதவள். நாடு பிடிக்க வந்த போர்ச்சுகீஸ் பரங்கிகளை ஒன்றல்ல, பத்து முறை தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்தவள் அப்பக்கா.
சென்னபைரதேவி ஊர் தோறும் சமணத் தீர்த்தங்கரர் கோவில் அமைப்பது என்று செயல்படுகிறவள். கோகர்ணம் மஹாகணபதி பகவான் மேலும் அளவற்ற பிரியம் கொண்டவள் காணாபத்யம் கொண்டாடும் சென்னா.

மிளகு -அத்தியாயம் நான்கு

அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார் பிரதானி. அவன் உள்ளே ஓடிப்போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை ஒன்றை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான்.
”இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான்”.
பிரதானி சொல்ல, புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்புக் கச்சையை எடுத்து வந்து தருகிறான்.

மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)

விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
“ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். நாடும் நீயும் எல்லாச் செல்வமும் குறைவின்றிப் பெற்று சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. அரியாகவும் அருகனாகவும் விளங்கி எங்கும் நிறை பரப்பிரம்மமான  தெய்வத்தின் பேரருளும், விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி தேவராயரவர்களின் வழிகாட்டுதலும் பிரியமும் என்றும் உனக்கு உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.