எந்த அவசரமும் இல்லை. என் மனதிற்குள் அம்மா திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாளில் தானே அம்மாவும் தூக்கு போட்டுக் கொண்டாள். இதே போலத்தானே அம்மாவும் நிர்வாணமாக பிணவறையில் கிடந்தாள். அவளையும் இப்படித்தானே கட்டினேன் மனம் நினைவுகளால் அலைகழிந்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.நாற்றம் ஒரு சுழல்.அதில் தான் எல்லா கசடுகளும் இருக்கிறது என்பதைப் புரிய எத்தனை காலம் ஆகித் தொலைக்கிறது ? அதை புரிந்து கொள்வதற்குள் காலத்தின் முடிவே வந்து தொலைத்து விடுகிறது.
Tag: இரா. சசிகலாதேவி
மங்களாம்பிகை
அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு அரிபரியாக இறங்கி கொண்டிருந்தனர். சென்னை வந்து இறங்கிய உடனே ஒரு வித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்கிறது. சென்னையின் வேகமே அதன் பலம் பலவீனம்.எங்கு தான் எதற்கு தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் தோன்றும். நானெல்லாம் இத்தனை வேகமாக ஓடினால் தலை குப்புற விழுந்துவிடுவேன்.வேகம் என்றாலே எனக்கு ஒரு வித அலர்ஜி. அதற்குச் சில காரணங்கள் உண்டு.