எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

நம் கணித மேதை இராமானுஜனை, இலண்டன் மருத்துவமனையில் சந்திக்க வந்த கணித வல்லுனரான ஜி ஹெச் ஹார்டி, தான் வந்த வாடகைக் காரின் எண் 1729 மிகவும் சலிப்புத்தரும் ஒன்று என்று சொன்னார். இராமானுஜன் உடனே சொன்னார் : “அது ஆர்வமூட்டும் ஒரு எண். அதுதான், இரு கனசதுரங்களின் (cubes) கூட்டுத் தொகையாக, இரு விதங்களில் சொல்லப்படக் கூடியவற்றில் மிகச் சிறிய எண் என்று சொல்லி இவ்வாறு விளக்கினார். 13+123 = 1729; 93+103= 1729.” ஒரு எண், தன்னளவில் ஈர்ப்பு ஏற்படுத்தாத ஒன்று, இரு மாறுபட்ட வழிகளில், இரண்டு விதமான நேர்மறை எண்களால் விளக்கப்பட்ட விதம் அருமை. ‘ஃப்யூச்சுராமா’ (Futurama) தொடரில், வரும் ஒரு ரோபோவின் எண் 1729.  அதைப் போலவே, ஃபார்ன்ஸ்வொர்த் பேராபாக்ஸ் (Farnsworth Parabox) தொடரில் அதன் பாத்திரங்கள் பல்வேறு உலகங்களில் குதிப்பார்கள்.