கயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி.