வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..