மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?

எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.

தொள்ளாயிரம் பாட்டிகள்

ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.

மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு

“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள்,