பெரும்பான்மையான இந்திய பத்திரிகை நிருபர்களும் இந்திய நிபுணர்களும், மதச்சார்பற்றவர்கள் அவர்களது மூக்கில் ஏற்றியுள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதால், அவர்கள் கூறும் ஹிந்துக்களுக்கு எதிரான, பாரபட்சமான, தவறான செய்திகளையே மக்களிடம் கக்குகிறார்கள். நிகோலஸ்ஸுடன் காரில் சென்ற சமயச்சார்பற்றவரின் முதல் குறிப்பே ஒரு சராசரி பார்வையாளரின் மனத்தில் பின் வரப்போகும் சம்பவங்களைப் பற்றிய சந்தேக மேகத்தை கவிழ்க்கிறது. ஆனால், திறம்பட படமாக்கப்பட்டிருந்த அந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், காரில் சென்றவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்துவது போலவோ, விளக்கப்படுத்துவது போலவோ ஒன்றுமே நடக்கவில்லை.