சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.