ஒரு நாள் என் தாயார் என்னையும் (எனக்கு 7 வயது ) என்னுடைய வேறொரு தமக்கையையும் (வயது 10) அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். புதிதாக உழுது போடப்பட்டிருந்த வயலின் பக்கலில் நடந்து சென்றோம். அது இலையுதிர் காலத்து ஆழமாகப் புரட்டி உழுதல் வகை, வயல்தரையைக் கோரி வாரும் பெரிய அடிமண் கட்டிகள் மெதுவாக நொறுங்கி பொடியாக உதிர்ந்து உழுசால் நெடுகிலும் பரவுவதற்காக செய்யப்படுவது. அவை மண் சீவல்கள் என்றழைக்கப் படுகின்றன; மற்றும் அவை கிட்டத்தட்ட மிகச்சரியான வடிவ கணிதத் திண்மங்கள் போல் தோற்றமளிக்கின்றன: வெட்டிக் குறைக்கப்பட்ட சாய்சதுர அறுமுகத் திண்ம வடிவங்கள் (truncated rhombohedron)எனக் கருதுங்கள்.