மகரந்தம்

கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.