கல் மதில் வேலி

“அவனுக்குப் பைத்தியமே? அந்த பூவரசம் இலைகளை பிடிங்கி அவன் சின்ன வயசிலை பிப்பீ ஊதினதை அவன் மறந்திட்டானே. அந்த மரங்களை வெட்ட சொல்லுறானே?”

“தான் பிப்பீ ஊதியது அவனுக்கு தெரியும் , அவன் சொல்றான் அடிக்கடி அந்த வேலி கதியால்களையும் கிடுகையும் மாற்ற வேண்டி வரும். அது வீண் செலவாம்.”

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”

பௌர்ணமி

“சொல்லப்போனா நாங்க ரயில்வே கேட்டுக்கே வரலாம்னு தான் பாத்தோம். அம்மா தான் லேட்டாக்கீட்டா”
“அதுலாம் ஒன்னும் வேணாம்.நானே வந்துருவேன்”
“இத்தன வருஷம் நீங்க வந்தது தெரியாதா? கேட்டா இந்த கருப்பந்துறையக் கடந்து வர பயமா இருக்குறதுனாலதான் குடிக்கேன்னு சொல்லுவீங்க. ஏதோ இன்னைக்கு தான் மொத தடவையா அந்த கழுத மூத்திரத்த குடிக்காம வந்துருக்கீங்க”
“அதான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்றம்லா”

ஜெயந்தி டீச்சர்

டீச்சராக மாறிய ஜெயந்தி மாரியிடம் நிறைய பேசினாள். பேச்சு வளர்ந்து அந்த’ நாட்கள் பற்றிப் போனது. வீட்டுப்பாடம் எழுதும்போது டீச்சர் ரோல் ஒரே முறை மாரிக்கு போனது. மாரி தன் மாதாந்திரப் பிரச்சனைகளைப் பேசினாள். கிளாசிலிருந்து பேக் எடுத்துக் கொண்டு நாப்கீன் வாங்க போகும் போது மாரியின் டீச்சர் ரோல் தொடர்ந்தது. நைன்த், டென்த் அக்காக்கள் வழி அறிந்தவைகளைப் பகிர்ந்து கொண்டாள். மாரி வழியாக பொம்பளப் பிள்ளைகள் படும் கஷ்டங்களை நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது; திகைப்பாகவும், பயமாகவும் இருந்தது.

விடியல்

தெக்குப்பண்ணையின் வயலில் அறுவடைக்கு பின்னாக எஞ்சும் வைக்கோலை தனது மாடுகளுக்காக கேட்பதற்கு வந்த பெரியசாமி,  “வைக்கல் எப்போ கெடைக்கும்?” என்றார். தெக்குப்பண்ணை “இப்போதான் பயறு மூடையல்லாம் லோடு போயிருக்கு, ஆள் ஒன்னும் கிடைக்கல, எடுத்துக் கட்ட இன்னும் ரெண்டு நாள் ஆகும் பெரியசாமி, ஆள் இருந்தா நீயே பாத்து “விடியல்”

கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”