கிறுக்குத்தனம் அடங்க மறுத்துத் தன் தலையை மீண்டும் மீண்டும் உயர்த்தும்போதெல்லாம் அக்கணமே அதை இரக்கமில்லாமல் அடக்குபவர்கள் ஸீபால்டின் பாத்திரங்கள். வாழ்வுடன் உறவு பூணுதல் என்ற விஷயத்தை அவர்கள் மிகவும் எச்சரிக்கையாய்த் தவிர்க்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு நோய்மையாய், ஒரு சுயவாதையாய், சோக உணர்வுடன் இணக்கம் பாராட்டுகிறார்கள், அது அவர்களை ஆட்கொள்வதற்கு எளிதில் இணங்கி விடுகிறார்கள். ஸீபால்டின் படைப்பில் தான்தோன்றித்தனமான கணப்பித்துக்கும் இருண்மையான யதார்த்தத்துக்கும் இடையில் ஓர் ஊசலாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.
Tag: அ. சதானந்தன்
டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு
ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும் கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.”