P.O.T.S – ஒரு மீள் பார்வை

சில ஆண்டுகளாக POTS (Plain Old Telephone System – வெற்று வயோதிகத் தொலைபேசி அமைப்பு) என்ற பெயரால் பரிகசிக்கப்பட்டுவரும் தரைவழித் தொலைபேசி அமைப்பு, அடிப்படையில் முறுக்கு இணை (twisted pair) தாமிரக் கம்பிகள்மூலம் இடையறாது குரல் குறிகைகளை அனுப்புதலாகும். இது 1876-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் தொழில் நுட்பம் .

கவசக் கோன்மை

உலகெங்கிலும் அரசுகளும், அறிவியலாளர்களும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பரிந்துரைக்க, மனிதர்கள் கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிந்து நடமாடுகிறார்கள். அது மட்டுமே போதுமானதன்று. கடந்த இரு வாரங்களாகக் கவசம் அணிவது மக்களின் விருப்பம் சார்ந்து இருந்ததிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது மக்களின் நடத்தையில் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது என்பதை “கவசக் கோன்மை”

மறைந்த நகரங்களும் பருவநிலை மாற்றமும்

ஹங்கேரிக்கு கிழக்கே இருந்த ஸ்டெப் புல்வெளிகளில் வரட்சி ஏற்பட்டபோது வேட்டைக்கார ஹனர்கள் மேற்குத் திசைக்கு தள்ளப்பட்டார்கள், அவர்கள் ரோமானிய பேரரசை அழித்தார்கள். எரிமலைகள் வெடித்தபோது புரட்சிக்கு முந்தைய பிரான்சில் பயிர்ச் சாகுபடி குறைந்தது, பசியால் தீவிரமாய் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் மனித வரலாற்றில் பருவநிலை ஒற்றைக் காரணியாக கிட்டத்தட்ட எப்போதும் இருந்ததில்லை.

நிலவை நோக்கி – கனவுப்பயணம்

படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.

கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்

‘இந்து’ பத்திரிகையைத் தவிர, 1969 -ல் மிக முக்கியமான ஒரு செய்தி அறிந்து கொள்ளும் முறை, அகில இந்திய ரேடியோவில், காலை 7:15 மணிக்கு, “செய்திகள் வாசிப்பது விஜயம்” , என்று தொடங்கும் தமிழ் செய்தி நிகழ்ச்சி. முதல் ஐந்து நிமிடங்கள் அரசியல் செய்திகள் என்னைக் கவராது. பிறகு, அப்போலோ 11 ராக்கெட் நிலவரம் என்ன என்பதை சரியாக பாத்திரச் சத்தங்களை மீறிக் கேட்க, என்னுடைய காதை ரேடியோவுடன் ஒட்டிக் கொள்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்

இப்படி நோண்டிக்கொண்டே போனால் இறுதியில் அந்த 2000 மீட்டர் தூரத்தையும் கடந்து எண்ணெய் பேசினை தொடும்போது உள்ளே சுமார் 2000 பி‌எஸ்ஐ அழுத்தத்தில் இருக்கும் கச்சா எண்ணையும் எரிவாயுவுமான குழம்பு பீரிட்டுக்கொண்டு பூதமாய் வெளிவரும். ஒரு ஒப்புமைக்கு சாதாரண கார் சக்கரத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் வெறும் 40 பி‌எஸ்ஐ மட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்! எனவே அதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து ஜாக்கிரதையாக அந்த கிணற்றை இறுக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

உயிரின் கதை – 5

நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, ”இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.