மணம்

காலை முதல் இரவு வரை நடக்கும் ஹோட்டல் அது. பலவிதமான பலகாரங்கள் காலை முதல் இரவு வரை செய்யப்படும். இந்த வாசனை முதலில் அவன் ஆடைகளில் மட்டுமே இருந்தது. பிறகு மெல்ல மெல்ல அது அவன் உடலுக்கு நிரந்தரமாக மாறத்துவங்கியது.  இரண்டு மூன்று நாள் அவன் வேலைக்குப் போகாமல் இருந்தாலும் அவன் மேல் இந்த வாசனை இருப்பதாகவே வசந்திக்கு தோன்றியது.

ஆடும் மனிதனும்

பிறகு ஆடே தொடர்ந்தது,
“சரி நானே விசயத்துக்கு வரன். நான் உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தரலாம்னு இருக்கன். நீங்க உங்க பாதையில இருந்து விலகிட்டீங்க. மத்த எல்ல உயிரினமும் இயற்கைக்கும், மத்த உயிர்களுக்கும் மதிப்பளிக்குது.”
சற்று இடைவெளி விட்டு,
“ஒத்துக்கறன், சில உயிரினங்கள் மத்ததை சாப்பிடுதுங்க தான், ஆனா அது உங்க அளவுக்கு இல்ல. நீங்க தேவைக்கு ரொம்ப அதிகமா கொலை செய்யறீங்க. நீங்க செய்றதுக்கு பலனை அனுபவிக்கலனா எப்படி. அதுக்கு முன்னாடி உங்களுக்குத் தர கடைசி வாய்ப்பு இது. இத நீங்க பயன்படுத்திக்கிட்டா சரி. இல்லனா அதன் விளைவுகள் மோசமானதா இருக்கும்,”