படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….