சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை. *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”
Tag: அம்பை
நீலகண்டப் பறவையைத் தேடியவர்
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.
ராம் என்றொரு நண்பன்
எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”
கல்யாணி ராஜன் கவிதைகள்
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.
என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு
மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத கனம் என் மேல் கவிவதை உணர்ந்தேன்.
அம்பை: பெண்மையின் அழகும் பெண்ணியத்தின் சீற்றமும்
அம்பை எழுதிய கதைகளில் அவருடைய பெண்ணிய சிந்தனைகள் பெண்களின் வாழ்க்கைக் களன் முழுதையும் தன் பார்வைக்கு எடுத்துக்கொள்கின்றன. ஒரு போராளியின் மேடையாக அல்ல, ஒரு அறிவார்த்த பார்வையாக அல்ல, ஒரு இலக்கிய வாதி தன் சீற்றத்திற்குத் தரும் கலை வடிவமாக. ஒரு பெண்ணிய எழுத்தாளராக அல்ல, சமூகத்தில் தான் கண்ணியத்துடன் கௌரவத்துடன் வாழும் உரிமை மறுக்கப்படும் ஒரு தனிமனிதராக. அடைபட்டுக் கிடக்கும் காலத்தையும், இடத்தையும் சூழலையும் விலக்கிப் பார்த்தால், அவர் எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகெங்கும் காணும் அடக்குமுறைக்கு எதிரான குரல்தான்.
அம்பையின் முறியாத சிறகுகள்
சமூகத்தில் பெண்ணின் நிலையை இவ்வளவு தெளிவாக முன் வைக்கும் அம்பை தான் எக்காலத்தும் தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்தே வருகிறார். பெண் எழுத்தாளர்களில் சிறந்த எழுத்தாளர் அம்பை என்ற அடையாளத்தில் இருக்கும் நுண் அரசியலையும் அம்பை மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஆண் பெண் அடையாள மறுப்பை ஏற்ற மகாபாரதக் கதைப் பாத்திரமான அம்பை என்ற கதைப்பாத்திரம் அம்பைக்கு மிகவும் நெருக்கமானதாகிறது.
வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்
அம்பை தன் கதைகளின் வழியே பெண்களுடன் தான் அதிகம் உரையாடுகிறார். அவர்களை தங்கள் வாழ்க்கை ஏன் இத்தனை சிக்கலாக உள்ளது என்பதைப் பற்றி யோசிக்கத் தூண்டுகிறார். பண்பாட்டின் பெயரால் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறார்
அம்பை – ஒரு எதிர் அணுக்க மதிப்பீடு
அம்பை எழுத்தாளர் என்பதைத் தாண்டி களத்தில் இயங்கும் ஒரு பெண்ணியலாளர். அவரது ‘ஸ்பாரோ’ அமைப்பு பெண் குரல்களை அனுபவங்களை ஆவணப்படுத்தும் செயலை பல்லாண்டுகளாக செய்து வருகிறது. அதில் அவருக்கு எவ்வித கோட்பாட்டு சார்பும் இல்லை. இதனால் ஸ்பாரோ அமைப்பின் ஆவண சேகரிப்பு இந்திய பெண்களைக் குறித்து அறிந்திட சிறப்பான தரவு பொக்கிஷம். குறிப்பாக அவர்கள் வெளியிட்டுள்ள, அதிகம் வெளியே தெரியாத விடுதலைப் போராட்ட பெண் மாந்தர் (அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது விடுதலை போராட்டத் தியாகிகளின் மனைவியர், சகோதரிகளாக இருக்கலாம்), அறிவியல் துறையில் பெண்கள், இலக்கியத்தில், நிகழ் கலைகளில், கிராம கலைகளில் பெண்கள், குடும்பங்களில் உள்ள பெண்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள
எல்லைகள் அற்ற வெளி
கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும் கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று
கண்ணனை அழைத்தல்
அம்பையின் இந்தக் கதை எனக்கு அம்மா, அம்மாச்சி, பெரியம்மா, பக்கத்துவீட்டு அம்மா, அத்தை, அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது. இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்க அம்மாச்சியும், சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும், படித்த அக்காவும், வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்
சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை
இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …
இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.
அடவியும் அந்தேரி மேம்பாலமும்..
சுய புலம்பல்களும்,தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை
ஊர் வேண்டேன்…
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?
விருதேற்பு உரை
எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.
ஞாபகக் காற்று
அம்பை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் தீவிரமான பெண்ணியவாதியானாலும் அழகியலோடு விளங்குபவை அவர் கதைகள். என்னைப் பொருத்து பெண்ணிய எழுத்தோ அல்லது வேறு விதக் கோட்பாட்டு எழுத்தோ வீரியமாக இருக்க அழகியலைத் துறந்தாலும் தவறில்லை. அம்பையிடம் இரண்டும் இயைந்து வந்தன
அம்பை – குறிப்புகள்
தமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.
சந்தையில் புத்தகங்கள்
புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து….“எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க” என்று கனிவுடனும் “உங்க ’சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது.