200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்

வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.

பெட்டகம்- வாசக மறுவினை

குட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.

இதழ் 200- பதிப்புக் குறிப்பு

அம்பை அவர்களை மையம் கொண்ட இதழாக இதை ஆக்கத் திட்டமிட்டபோது அதற்குக்
கடும் எதிர்ப்பு வந்தது. அது எங்களுக்கு வியப்பை அளித்தது. இத்தனை கசப்பு, இத்தனை விலகலா
என்றுதான் வியப்பு. அந்த எதிர்ப்பு பூராவும் எங்களை இந்த முயற்சியைக் கைவிடச் சொல்லிச்
செய்யப்பட்ட வற்புறுத்தல்கள். செய்தவரோ நண்பர் மட்டுமல்ல, சிறப்பிதழின் நாயகியே அவர்தான்.