வால்மீகியைப் போல அவளுக்கும் இராமாயணம் எழுத வேண்டும் என்று ஆசை. செந்துருதான் சீதை. சீதைதான் செந்துரு. தன் அனுபவங்களை தன் மொழியில் எழுத விருப்பம் அவளுக்கு. ”நான் எழுதிய ராமாயணம் ஒன்று போதாதா?“ என்கிறார் வால்மீகி. ஆண் அல்லவா? ”இல்லை இனிவரும் யுகங்களில் பல ராமன்கள், பல சீதைகள்” என்கிறாள் சீதை. ”நான் எழுதாத சீதையா?” வால்மீகியின் அகங்காரம் விடுவதாயில்லை. ”நான் அனுபவித்தவள், பலவிதமான அனுபவங்களை உள்வாங்குபவள்; என் மொழி வேறு” என்கிறாள் சீதை.