அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்

நமது முதல் கேள்வி, புதியதாக இராகம்  கண்டு பிடிப்பது அவசியமா?  ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ராகங்கள்  உள்ளன. அவற்றை கண்டு பிடிப்பதற்கே  ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது  இது எதற்கு என்ற கேள்வி எழலாம்.  இதற்கு கண்ணதாசன் “ஏன்  என்ற கேள்வி ஒன்று  என்றைக்கும் தங்கும்,  வெறும்  இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்” என்று பதில் அளித்து இருக்கிறார்.  இந்த பாடல்,  “ஏழு ஸ்வரங்களுக்குள்  எத்தனை பாடல்”, இடம் பெற்ற  படம் ” அபூர்வ ராகம்”.   அந்த  திரை படத்திலேயே இன்னொரு பாடல் (அதிசய ராகம், ஆனந்த ராகம்) வழியாக  நம்  கேள்விக்கு விடையும் அளித்து இருக்கிறார்கள்  MSV  மற்றும்  Dr  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.   அந்த திரைபாடப் பாடலின் துவக்க ராகம் “மஹதி”.