சுவீடன் ஒரு சோஷலிச நாடா?

இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. செல்வமும் பெருகியது. இதைச் சீரழிக்காமல் விநியோகிப்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருந்ததால், நாட்டின் செல்வம் மேலும் கூடியது. உள்நாட்டு வர்த்தகங்களும், மற்றைய நாடுகளோடு மோத வேண்டியிருந்ததால், தக்க சீரமைப்புகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியதால், தோளோடு தோள் நின்றன. தொழிற்சங்கங்களும், விவசாயம், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் போன்ற வெள்ளை யானைகளை மூட்டை கட்ட அனுமதித்தன. மிகவும் ஏழை நாடாயிருந்த சுவீடன், கிரிப்பேன்ஸ்டெட் ஏற்படுத்திய இம்மாற்றங்களால், அவர் அரசாங்கத்திலிருந்து விலகிய நூறு வருடங்களுக்குப்பின் மிகப் பணக்கார நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாறியது.

சகுனியின் சொக்கட்டான்

P4 என்பது மிகவும் அதிகமான மக்களைக் கொல்லக்கூடிய நோய்க் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மையம். இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் 2015ஆம் ஆண்டு சைபீரியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மாதிரி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதனால் வைரஸ் இங்கிருந்துதான் வெளியே போயிருக்க வேண்டும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.

நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி

மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.