அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.