என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.
Tag: அமர்நாத்
உபநதிகள்-2
பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து சால்ட்லேக் சிடிக்குத் தனியாகப்பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன்.
உபநதிகள் – 1
ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க…
அத்திம்பேர்
குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான்.
ஒந்தே ஒந்து
சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்?
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…
பணம் பணம்… (2)
முதலில் ஒரு சௌகரியமான இல்லம் தேட வேண்டும். தற்போதைய இடம் தாற்காலிகம் என்பதுடன் அவன் தேவைக்கு சிறியது. அவன் தொழிலுக்கு எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ‘ஹார்மொனி’யிலோ ‘ஃப்ளவர்-ஆர்ரோ’விலோ சந்திக்கும் பெண்களை அவனால் விலையுயர்ந்த விடுதிக்கும் திரைப்படத்துக்கும் அழைத்துப்போக முடியும். அவர்களில் ஒருத்திக்கு அவன்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் பிறக்கும். அதனால் ஊரின் எல்லைக்கு உள்ளேயே.
பணம் பணம்…
இனிமேலும் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டுமா? செய்வதில் என்ன தவறு? உடல் வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான வருமானம் சம்பாதிக்க வேலை. அது முடிந்ததும் மீதி நேரத்தில் மன வாழ்க்கையை வளர்க்க தியானம். அத்துடன், பல வருஷப் பழக்கத்தை ஒரே நாளில் விடமுடியாது. மூளையின் இரு பாதிகளுக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக…
ஏகபோகம்
மறுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது.
சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி.
“ஆகா!”
“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”
உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள்.
குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது.
“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”
1957-2
பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள். முதல் படிவத்தின் (இன்றைய கணக்கில் ஆறாம் வகுப்பு) முதல் பாடம், ஆங்கிலம். வகுப்பில் பெரும்பாலோர் சுற்றுவட்டாரத்து கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள். அதுவரை காதில் விழுந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே அறிந்த அவர்களுக்கு அம்மொழியின் முதல் அறிமுகம். அதனால் ஆசிரியர் கேட்கிறார்.
1957 – 1 செம்பருத்தி
ஆனால் நகராட்சி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் சம்பளம் அவள் ஆசையைத் தடுத்திருக்கும். அவள் செய்வது ஜெபநேசனுக்குத் தெரியாமலும் இருக்கலாம். கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு. அதே சமயம் இந்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மனித சட்டம். உலகில் கிறித்துவக் குழந்தைகளைப் பெருக்குவது அதற்கும் மேலான கடவுளின் ஆணை. அதை நிறைவேற்றுவது கடவுளின் பணியாளரான ஆசீர்வாதத்தின் கடமை.
ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்
பதின்பருவத்தில் பொதுவாக பெற்றோர்களின் பழக்கங்களும் அறிவுரைகளும் குழந்தைகளுக்கு எரிச்சலைத் தரும். என் விஷயத்தில் என் அப்பாவின் தினப்படி முனகல். ‘சம்பளம் பத்தவில்லை, பணக்காரர்கள் செல்வத்தைச் சுருட்டிக்கொண்டு விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நிர்வாகத்தினர் பக்கம்.’ இப்படி. ஒருநாள், பொறுக்கமுடியாமல் வீட்டுச் செலவுகளின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அத்தியாவசிய செலவுகள் போக மீதிப் பணத்தை செலவழிக்குமுன் அதன் அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் பயணம் போவோம். டிஸ்னி உலகம் இல்லை லாஸ் வேகாஸ். பத்தாயிரம் டாலர் பறந்து போய்விடும். முழுநேரமும் ஓயாத மனத்தாங்கல், சிறு தடங்கலுக்கும் வருத்தம், திரும்பி வந்ததும் ஏமாற்றம். அதை ஒதுக்கினேன். அம்மாவின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தினேன்.
எதிர்வளர்ச்சி
இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.
நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2
லாபத்தை அதிகரிக்க ஒரு நிறுவனம் புதிய இயந்திரங்களிலும் பணியாட்களுக்கு நவீன வழிகளில் பயிற்சி அளிப்பதிலும் செலவிடலாம். அதைவிட சுலபமான வழி, அதே துறையில் இருக்கும் இன்னும் சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்தல். அப்படி உருவாகும் வலிய நிறுவனம் தன் பொருட்களின், பணிகளின் விலைகளை விருப்பம் போல் ஏற்றலாம். சட்டத்தின் கண்களில் அது குற்றம் இல்லை. இணைந்த நிறுவனங்களின் பொதுவான பதவிகள் என பலரைப் பணிநீக்கம் செய்யலாம். தொழிலுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக மலிவாக வாங்கலாம்.
இரண்டு அலைபேசி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தொடர்புகளின் விலையைக் கூட்டினால் அவற்றைப் பயன்படுத்தாமல் எதிர்ப்புகாட்ட முடியும். ஆனால், உடல் சிகிச்சைக்கு?
நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1
வேலைக்காக நாஷ்வில் வந்ததில் இருந்து மளிகை சாமான்கள் வாங்க ப்ரஷாந்த்துக்குப் பிடித்த கடை பப்ளிக்ஸ். அலுவலகத்தின் பக்கத்திலேயே ஒன்று. தனியாகவோ இல்லை நிவேதிதா ஊரில் இருந்தால் அவளுடனோ வாரம் ஒருமுறையாவது போவது வழக்கம். காரில் இருந்து இறங்கி, கடைக்கு நடந்தபோதெல்லாம் அந்த சிகிச்சையகம் அவன் கண்ணில்படும். பப்ளிக்ஸின் இடப்பக்கம் வரிசையாக பலரக உணவகங்கள், முடித்திருத்தகம், வளர்ப்புப் பிராணிகளின் தேவைகள், அலைபேசி… கட்டடத்தின் வலப்பக்க மூலையில் சிகிச்சையகம் மட்டும். அதன் கதவில்..
உணவு, உடை, உறையுள், … – 3
. நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
உணவு, உடை, உறையுள், … – 2
இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.
உணவு, உடை, உறையுள், … 1
பட்டியலின் கீழே அவள் தோழியுடன் பேசிய நேரத்தில் அவன் பென்சிலால் எழுதிய ஒரு படம். ஜன்னல் வழியாகத் தெரிந்த இலைகள் உதிர்த்த மரம். இரண்டையும் அவள் சிலநொடிகள் உற்றுப்பார்த்தாள். மரத்தின் வெறுமை படத்தில் வெளிப்பட்டதைக் கவனித்தாள். காகிதம் சுற்றிய பெட்டிக்குள் இன்னொரு வர்ண அட்டைப்பெட்டி. வாடர்-கலர் கிட் – முப்பது வர்ணங்கள், மூன்று ப்ரஷ்கள், முன்னூறு காகிதங்கள்.
விலைக்குமேல் விலை
அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”
கோழிக் குஞ்சுகள்
தாத்தாவின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறான். வீட்டிற்குப் பின்னால் காலியாக இருந்த மனை கொல்லையாக மாறியிருந்தது.
“பட்டணத்தில இத்தினி பெரிய நிலம். அதிருஷ்டம் தான்.”
“கோழி வளர்க்கிறோம்” என்று தாத்தாவின் கவனத்தைத் திருப்புகிறான்.
அன்புள்ள அன்னைக்கு
நீ வாழ்ந்ததைவிட என் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது மூன்று நான்கு தலைமுறைகளாக நடந்தது மேலும் தொடரும் என்பதால் வந்த நம்பிக்கை. நீ வளர்ந்த வீட்டைவிட இப்போதைய உன் இல்லம் இரண்டு மடங்கு. எனக்கெனத் தனி அறைகள். தரைத்தளம் முழுக்க விளையாட்டுச் சாமான்கள். வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளம். அவற்றை அனுபவிக்கத்தான் எனக்கு மனம் இல்லை. வன்முறையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து புதுவாழ்வு தேடும் அகதிகள், ஐந்து காலன் தண்ணீரைச் சுமந்து ஐந்து மைல்கள் நடக்கும் சிறுமிகள், பசியில் வாடும் பிஞ்சு முகங்கள் – இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது புறநகர இல்லமும் அதன் சக்தி விரயமும் அர்த்தம் இழக்கின்றன.
மிகப்பெரிய அதிசயம்
“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”
“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”
“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”
20xx- கதைகள்: முன்னுரை
நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.
வேலைக்கு ஆள் தேவை
‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்துவந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை.
என்ன பொருத்தம்!
பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோதுதான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனை பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். …. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா?
அவர் வழியே ஒரு தினுசு
“மார்க்கெட்டிங். இந்தியாவில் சத்து இல்லாத செயற்கை சாப்பாட்டை விற்க எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தலைப்பில். சென்னை டிவியில் சோடா, சாக்லேட், சிப்ஸ் இதுக்கெல்லாம் எவ்வளவு கமர்ஷியல்! கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் இட்டிலி, லட்டு, காப்பிக்கு பதிலாக வெள்ளை ப்ரெட், டோநட், கோலா. அதானல உடல் பருமன், இதய பலவீனம், இரத்தத்தில் சர்க்கரை.”
நிஜமான வேலை
“மூலதன வருமானத்தின் பெருக்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி ஈடுகொடுக்க முடியாது என்று அவர் சொல்வது சமீபத்திய வரலாற்றின்படி சரி. அதனால் ‘கூப்பான்கள் வெட்டும்’ ஏழைகள் ஏழைகளாகவே இருக்க, பணக்காரர்களிடம் இன்னும் பணம் சேர்கிறது என்பதும் ஓரளவுக்கு உண்மை. ஆனால், உலகமுழுவதுக்குமான மூலதன வரி பிரச்சினையைத் தீர்க்கும் எனத்தோன்றவில்லை.”
பிரகாசமான எதிர்காலம்
அப்போது தான் அவன் மனமாற்றம் தாற்காலிகமானது இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதல் வாழ்க்கையில் புதிய அனுபவம். கல்வி அல்லது தொழில் நிமித்தம் ஊர் மாறியதால், இன்னொரு பெண் அபகரித்ததால், பழக்கம் புளித்துப் போனதால் உறவுகள் முறிந்திருக்கின்றன. அவனிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அவள் எதிர்பாராதவை. உலர்சலவை செய்த வர்த்தக ஆடைகளுக்கு பதில் சுருங்கிய சட்டையும் பான்ட்ஸும். கடைகளில் வாங்காமல் அவனே தயாரித்த மதிய உணவு. முகத்தில் தீவிர சிந்தனையின் ஆழம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
2016 – எண்கள்
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருக்கும். எல்லாருடைய வீட்டிலும் டிவிக்கு கேபிள் இருக்கு, நாமும் வச்சுண்டா என்னன்னு கேட்டான். நமக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்றதுக்குப் பதிலா அவனையே வீட்டுக்கணக்கு போடச்சொன்னேன். நான் வீணை சொல்லித்தரேன், அவ பாட்டு க்ளாஸ் நடத்தறா. அதில வரும்படி இவ்வளவு. வீட்டு வாடகை, எலெக்ட்ரிக் பில், சாப்பாட்டுச்செலவு… எல்லாம் கணக்குப்போட்டு கடைசியில அறுபது டாலர் தான் மிச்சம்னு கண்டுபிடிச்சான். அதில ஐம்பது டாலரைத் தூக்கி கேபிளுக்கு கொடுக்கறது அனாவசியம்னு அவனுக்கே தோணிடுத்து.”
“நீங்க செஞ்சது புத்திசாலித்தனமான காரியம். முடியாதுடான்னு ஆரம்பத்திலயே பட்னு சொல்லியிருந்தா அவனுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.”
2019- ஒரேயொரு டாலர்
கட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள்.
2010- மீண்டும் மால்தஸ்
நசி தோசையைத் தின்னாமல் அதை துண்டுதுண்டாகப் பிய்த்து அழகு பார்த்தாள். ‘என்னை நான் கவனித்துக் கொள்வேன். என் எதிர்காலத்துக்காக இன்னொரு குழந்தையை வரவழைக்க வேண்டாம். அதற்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்… அஜீரணம் என்று மருத்துவரிடம் போக, அவர் வயிற்றில் கான்சர் என்று சொல்வதுபோல ஆகும்.’
2015: சட்டமும் நியாயமும்
“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும், ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப்போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பது எப்படி தவறாகும்?”
2084: 1984+100
“மாயப் பணம் பெருகியது, மக்கள் தொகை வளர்ந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை. ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பொருட்கள். சீர்ப்படுத்த முடியாதபடி பழுதுபட்ட அல்லது நல்ல நிலையில் இருந்தாலும் காலவதியான இயந்திரங்கள்.
இயற்கை சுருங்கியது.
உடல்நிலை, மகிழ்ச்சி, சமுதாய உணர்வு குறைந்தது.
2020- நிலமடந்தை
“ஆண் குழந்தைகள் பேச்சில நிதானமாத்தான் இருக்கும். அதுவும் வீட்டிலயே வளர்ந்திருக்கான். ப்ரீ-ஸ்கூல்ல போடு! மத்த குழந்தைகளோட விளையாடினா பேச்சு தன்னால வரும்.”
அறிவாளியாக வளரப்போகிறான் என்ற ஆசையில் வித்யாகேந்திரம். விரைவிலேயே காப்பாளர்களின் முறையீடுகள்.
“தானாகவே விளையாடுகிறான்.”
“மற்ற குழந்தைகளுடன் பேசுவதில்லை, உறவாடுவதும் இல்லை.”
“எங்களையும் சரி, மற்ற யாரையும் சரி, நேருக்குநேர் பார்ப்பதில்லை.”
2013 – இன்றே, இப்பொழுதே
“முதல்ல ஆணும் பெண்ணுமா ரெண்டு இளவட்டங்கள். தங்கற இடம், சாப்பிடற இடம், தினப்படிக்கு மூணுவேளை முழுசாப்பாடு, இரண்டு காப்பியோட நொறுதீனி, எல்லாம் காட்டினாங்க. அந்த இடத்திலயே அவசரம்னா ஒரு வயசானவங்க டாக்டர். இருபத்திநாலு மணி நேரமும் இரண்டு நர்ஸ்கள். ஹார்ட் அட்டாக் மாதிரி எமர்ஜென்ஸிக்கு உடனே ஏபெக்ஸ் மெடிகல் காம்ப்ளெக்ஸுக்கு எடுத்துட்டுப்போக தயாரா ஒரு வேன்.”
எல்லா சௌகரியங்களையும் சேர்த்துப் பார்த்தபோது பணக்காரர்களுக்கான காப்பகம் போல சாமிக்குத் தோன்றியது.
2024 /எத்தனைகோடி இன்பம் வைத்தாய்!
சரவணப்ரியா கணக்கிட்டபடி மருத்துமனையைச் சுற்றி வாழ்ந்தவர்களின் நிதிநிலமை வேகமாகத் தாழ்ந்துபோனது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இருபதில் இருந்து முப்பத்தைந்து வரையிலான இளைஞர்களை சந்திரா நன்றாக அறிவாள். கல்லூரிக்குப் போனது இல்லை. நிரந்தர வேலை என்று ஒன்றும் கிடையாது. நின்றுபோன தொழிற்சாலையில் இருந்து சாமான்களை பெயர்த்துவந்து விற்பது, பண்ணைகளில் களை பிடுங்குதல் அறுவடை காலத்தில் உதவி, சொந்தவீடு வைத்திருக்கும் ஒருசில அதிருஷ்டசாலிகள் வீடுமாற்றினால் சாமான்களைச் சுமப்பது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது. இந்நிலையில், இன்னொரு உயிரைக் கொண்டுவர எப்படி ஆசை இருக்கும்?
ஜனனமரணம்
கற்றதைப் பயன்படுத்தி நாங்கள் செய்யும் முயற்சிகளில் எப்போதாவது ஒன்றிரண்டு நல்ல சேதிகள் – அழியக்கூடிய நிலையில் இருந்த வழுக்கைக்கழுகு இனத்தின் எண்ணிக்கை பெருகிவருகிறது. ஆனால், தினமும் நாங்கள் சந்திக்கும் சோகசித்திரங்கள் – வெப்பநிலையின் தீவிர ஏற்ற இறக்கங்கள், இரட்டித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை, பசுமைப்புரட்சி என்கிற மாயை, பொறுக்கமுடியாத ஏழ்மை, எல்லாவகையான காடுகளின் அழிவு, கனிமங்களின் இழப்பு, சூழலின் நச்சுப்பொருட்கள்.
இருவேறு உலகங்கள்
இரண்டில் எது நிஜம்? ரசியின் உலகில் கட்டடங்கள் கட்ட, கட்டிய அமைப்புகளை சுத்தமாக வைக்க, அவற்றில் குடியிருக்கும் மனிதர்களுக்கு காப்பி சிற்றுண்டி தயாரிக்க, அவர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, பயணவிடுதிகளில் படுக்கை உறைகளை மாற்ற காப்ரியெல் உலகத்தினர் அவசியம். திருப்பி அவர்களுக்கு ரசி உலகத்தினர் என்ன செய்கிறார்கள்? கையகல அலைபேசியின் திரையில் இருந்து பிருமாண்டமான வெள்ளித்திரை வரை மாய உலகை சிருஷ்டித்து மனமகிழ்வு தருகிறார்கள். அவ்வளவுதான்.