அந்தச் சந்திப்பு எதையும் நம்புவதற்கு எனக்கு வழி தந்திருக்கிறது. எதுவும் சாத்தி்யப்படக் கூடியதென்று நம்புகிறேன். யாராவது என்னிடம் வந்து சிறகுகளோடு பழைய டெல்லிகோட்டையின் மேல் நீங்கள் பறந்ததைப் பார்த்தேன் என்று சொன்னால் நான் நம்புவேன். அதற்குப் பெரிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு வரலாற்றாசிரியன் பழைய சிதைவுகளின் மீது சிறகுகளோடு கண்டிப்பாகப் பறக்க முடியும். அவனால் அதைச் செய்ய முடியும். தனக்கான சிறகுகளை வளர்க்க முடியாதவன் எப்படி ஆராய்ச்சியாளனாக முடியும் ?