அந்நியனின் அடிச்சுவட்டில்

என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”

அன்னியன்

எல்லாருடைய கண்களும் அந்த குழந்தையின் மேல்தான். அழகும்ஆனந்தமும் வடிவெடுத்ததுபோல் இருக்கிறது அந்த குழந்தை. அந்த கொழு கொழு கன்னத்தை, கைகளை தொடையை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. பெரிய மூக்கும் , தலையில் காந்தி குல்லாவுமாக இருக்கிற மராட்டி கிழவர் மேல் உட்கார்ந்து கொண்டு அவர் பெரிய மூக்கை கிள்ளுகிறது, அதை தடுத்தால் குல்லாயை உருவுகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மராட்டி கட்டு புடவை கட்டிக்கொண்டு கத்திரிப்பூ நிறத்தில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கிற கிழவிக்கு ஒரே பெருமை. அது அவள் பார்வையிலேயே தெரிகிறது. கி ழவரிடம் இருந்து குழந்தை கிழவியிடம் தாவி அவள் குங்குமப் பொட்டை நோண்டுகிறது. கிழவி சிரித்துகொண்டே “விஷமக்காரன்! எப்படி படுத்துகிறான் பாருங்கள்”